திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை 1½ கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை 1½ கோடி
x
தினத்தந்தி 3 Oct 2017 5:07 AM IST (Updated: 3 Oct 2017 5:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செப்டம்பர் மாத உண்டியல் காணிக்கை ரூ.1½ கோடியை தாண்டியது. 1½ கிலோ தங்கமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதந்தோறும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணம் எண்ணப்படுகிறது. கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடந்தது. கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் தலைமை தாங்கினார். கோவில் இணை ஆணையர் பாரதி முன்னிலை வகித்தார்.

கோவில் ஊழியர்கள், அய்யப்ப சேவா சங்கத்தினர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகம், உள்பிரகாரம், மகா மண்டபம் உண்டியல்கள் மற்றும் யானை பராமரிப்பு, கோசாலை, அன்னதானம், மேல கோபுரவாசல் திருப்பணி, சிவன் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

இதில் மொத்தம் ரூ.1 கோடியே 68 லட்சத்து 82 ஆயிரத்து 526–யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 1 கிலோ 530 கிராம் தங்கமும், 21 கிலோ 750 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், பக்தர்கள் 277 வெளிநாட்டு பண நோட்டுகளையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


Next Story