கழுதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற த.மா.கா.வினர் 15 பேர் கைது
கோவில்பட்டி பஸ் நிலையத்தில் கழுதைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட முயன்ற த.மா.கா.வினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் ரூ.5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் இங்கு பயணிகளுக்கு நிழற்குடை அமைக்கப்படவில்லை. பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், பெரும்பாலான பஸ்கள் வெளியே நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை. இலவச கழிப்பறை, கட்டண கழிப்பறை திறக்கப்படவில்லை. புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதை கண்டித்தும், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், பஸ் நிலைய வளாகத்தில் 2 கழுதைகளுடன் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக த.மா.கா.வினர் நேற்று காலையில் வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார், கழுதைகளுடன் வந்த த.மா.கா.வினரை தடுத்து நிறுத்தினர். இதனால், த.மா.கா.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் த.மா.கா.வினரிடம் இருந்த 2 கழுதைகளையும் போலீசார் பறித்தனர்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற த.மா.கா. நகர தலைவர் ராஜகோபால், பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், மாவட்ட துணை செயலாளர் ரசாக், பாலகிருஷ்ணன், நகர துணை செயலாளர் காளி பாண்டியன், வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, நகர செயலாளர் சுப்புராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் யோசுவா ஞானசிங், முத்துராமலிங்கம், மணிமாறன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story