10 சட்டமன்ற தொகுதி வரைவு பட்டியலில் 25 லட்சத்து 57 ஆயிரத்து 228 வாக்காளர்கள்


10 சட்டமன்ற தொகுதி வரைவு பட்டியலில் 25 லட்சத்து 57 ஆயிரத்து 228 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 4 Oct 2017 4:30 AM IST (Updated: 4 Oct 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 25 லட்சத்து 57 ஆயிரத்து 228 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட 28,422 பெண் வாக்காளர்கள் அதிகம் ஆகும்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் கடந்த 5.1.2017 அன்று வெளியிடப்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 25 லட்சத்து 41 ஆயிரத்து 497 வாக்காளர்கள் இடம் பெற்றுஇருந்தனர். இதில் ஆண்கள் 12 லட்சத்து 56 ஆயிரத்து 908. பெண்கள் 12 லட்சத்து 84 ஆயிரத்து 477. இதரர் 112.

அதன்பிறகு 6.1.2017 முதல் 31.7.2017 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும், தொகுதிக்குள் மாற்றம் செய்யவும், முகவரிமாற்றம் செய்திட என 31 ஆயிரத்து 525மனுக்கள் பெறப்பட்டன. உரிய விசாரணை செய்யப்பட்டு 29 ஆயிரத்து 385 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2 ஆயிரத்து 140 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்அடிப்படையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவுப்பட்டியலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 25 லட்சத்து 57 ஆயிரத்து 228 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆண்கள் 12 லட்சத்து 64 ஆயிரத்து 343, பெண்கள் 12 லட்சத்து 92 ஆயிரத்து 765. இதரர் 120. ஆண்களை விட 28 ஆயிரத்து 422 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

தற்போது இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 1.1.2018-ந்தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும்பணி நடைபெற உள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க படிவம் 6-ம், நீக்கம் செய்திட படிவம் 7-ம், திருத்தங்கள் செய்திட படிவம் 8-ம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8 ஏ-யும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வருகிற 31-ந்தேதிவரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், மாநகராட்சி துணைகமிஷனர், மாநகராட்சி உதவிகமிஷனர் மண்டல அலுவலகங்கள், உசிலம்பட்டி, மதுரை ஆர்..டி.ஓ., அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் அலுவலக வேலை நாட்களில் அளித்திடலாம்.

மேலும் வருகிற 8 மற்றும் 22-ந்தேதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் உரிய படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். பெயர்களை சேர்க்க அளிக்கும் படிவம் 6-உடன் இருப்பிட முகவரிக் கான ஆதாரத்தையும், 18 முதல் 24 வயதுவரை உள்ளவர்கள் பெயர்களை சேர்க்க வயதுக்கான ஆதாரத்தையும் இணைக்க வேண்டும். 31-ந்தேதிமுடிய பெறப்படும் படிவங்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2018 அன்று வெளியிடப்படும். எனவே தகுதியான அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வருவாய் அதிகாரி குணாளன், ஆர்.டி.ஓ.க்கள் கார்த்திகேயன் (மதுரை), சுகன்யா(உசிலம்பட்டி), கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story