ஒட்டன்சத்திரம் அருகே வறண்டு கிடக்கும் பெருமாள்குளம்


ஒட்டன்சத்திரம் அருகே வறண்டு கிடக்கும் பெருமாள்குளம்
x
தினத்தந்தி 4 Oct 2017 4:15 AM IST (Updated: 4 Oct 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் உள்ள விருப்பாட்சி பெருமாள்குளம் வறண்டு காட்சியளிக்கிறது.

சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் தாலுகா, விருப்பாட்சியில் பெருமாள்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் மூலம் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி சின்னக் கரட்டுப்பட்டி, பெரியகரட்டுப்பட்டி, வீரலப்பட்டி, விருப்பாட்சி, சாமியார்புதூர் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த குளத்துக்கு பரப்பலாறு அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் வருகிறது.

இந்தநிலையில் அணைப்பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையில் குட்டைப்போல் தண்ணீர் காட்சியளிக்கிறது. எனவே பெருமாள்குளத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் பெருமாள்குளம் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள 6 குளங்களும் வறண்டு காட்சியளிக்கிறது.

பெருமாள்குளம் வறண்டதால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான நிலங்கள் தரிசாக காட்சியளிக் கிறது. மேலும் விவசாய கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டன. மேலும் குடிநீருக்காக பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சத்திரப்பட்டி பகுதிகளில் மழை பெய்தது.

இருந்தபோதிலும் குளத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. மேலும் குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கின்றன. எனவே வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு குளத்தை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story