தமிழக உரிமையை மத்தியஅரசிடம் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்
தமிழக உரிமையை மத்தியஅரசிடம் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கூறினார்.
தஞ்சாவூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. தமிழக வரலாறு புகழ் மிக்கது. காமராஜர், அண்ணா உள்ளிட்ட பல தலைவர்கள் முதல்-அமைச்சராக இருந்துள்ளனர். அந்த முதல்-அமைச்சர் பதவியில் தான் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார். தமிழகத்தின் நலனை புறக்கணித்துவிட்டு, தனது சுயநலத்திற்காக மத்தியஅரசிடம் தமிழக உரிமையை அடகு வைத்துவிட்டு முதல்-அமைச்சர் நாற்காலியை சுற்றி சுற்றி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரிந்து சென்ற ஒருவரையொருவர் எதிர்த்து வந்தனர். இப்போது அவர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் எதற்காக பிரிந்து சென்றார்கள். எதற்காக இணைந்துள்ளனர் என்று தெரியுமா? அரசியல் ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ அவர்கள் இணையவில்லை. சுயநலத்திற்காகவே இணைந்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி, நீட் தேர்வு வரை மாணவர்கள், இளைஞர்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் போலீசார் அடக்குமுறையை கையாளுகின்றனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டு கைது செய்கின்றனர்.
விவசாய தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு மீதும், என் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறட்சியின் காரணமாக 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்தும், மாரடைப்பாலும் இறந்துள்ளனர். தமிழகத்தில் கடன் எவ்வளவு உள்ளது. நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஏற்கனவே தமிழக கவர்னராக இருந்தவர் எந்த ஜனநாயக மரபையும் காக்கவில்லை. புதிதாக கவர்னர் வந்தாலும் இன்னும் நிலைமை மோசமாகும். மத்தியஅரசுக்கு ஆதரவு தந்து, அவர்கள் ஆட்டிப்படைக்கும் வகையில் செயல்படும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழகஅரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழகஅரசு பதவி விலக வலியுறுத்தி தஞ்சை ரெயிலடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பாரதி, முத்து.உத்திராபதி, மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், நிர்வாகிகள் அரங்க.சின்னப்பா, கிருஷ்ணன், தமயந்தி திருஞானம், பாலசுந்தரம், பக்கிரிசாமி, விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story