நேர்முக தேர்வுக்கு வருமாறு ஐகோர்ட்டு நீதிபதிக்கு கடிதங்கள் அனுப்பிய நிறுவனங்களில் விசாரணை
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிக்கு, மேற்பார்வையாளர் பணிக்கான நேர்முக தேர்வுக்கு வருமாறு அழைப்பு கடிதங்கள் அனுப்பிய கோவை கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த நிறுவனங்களில் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை,
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனின் வீடு வில்லிவாக்கத்தில் உள்ளது. இவரது வீட்டு முகவரிக்கு சில நாட்களுக்கு முன்பு 5 கடிதங்கள் வந்தன. அவை கோவை கருமத்தம்பட்டி மற்றும் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 5 தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் இருந்து வந்தன.
தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடக்க இருப்பதாகவும், அதில் கலந்துகொண்டு பயன்பெறும்படியும் கூறப்பட்டு இருந்தது. மாத சம்பளமாக ரூ.20,500 முதல் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.250 முதல் ரூ.750 வரை பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்து நீதிபதி வைத்தியநாதன் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி டி.ஜி.பி.க்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நீதிபதி வைத்தியநாதனுக்கு எங்கிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. அது பற்றிய தகவல்கள் வருமாறு:-
கோவை கருமத்தம்பட்டியில் உள்ள டைமண்ட் இன்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மண்ட் நிறுவனம், திருப்பூர் நல்லூரில் இயங்கி வரும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மண்ட் நிறுவனம், திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் இயங்கி வரும் ரெனால்ட் இன்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மண்ட், வால்வோ இன்டஸ்ட்ரி யல் ரெக்ரூட்மண்ட் மற்றும் திருச்சியில் உள்ள ஏர்-டெக் சொல்யூசன்ஸ் ஆகிய 5 தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் இருந்து நீதிபதிக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து கருமத்தம்பட்டியில் உள்ள டைமண்ட் இன்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மண்ட் நிறுவன உரிமையாளர் வாசுதேவனிடம், கோவை மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு குணசேகரன் விசாரணை நடத்தினார். கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தமிழக அரசின் கீழ் பதிவு பெற்றே நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், இதுவரை ஏராளமானோருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
‘நீதிபதி வீட்டு முகவரி உங்களுக்கு எப்படி கிடைத்தது? இதுவரை எத்தனை பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது? பதிவு கட்டண தொகை நிர்ணயம் செய்வது எப்படி?’ என 30-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதற்கு பதில் அளித்த வாசுதேவன், ‘எங்களது நிறுவன விளம்பரங்களில் உள்ள மொபைல் எண்ணுக்கு பலரும் தொடர்பு கொண்டு தகவல்கள் விசாரிப்பார்கள். அவர்கள் விவரங்களை எங்களது மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்புவார்கள். அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நாங்கள் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதங்களை அனுப்புவோம்.
குறிப்பிட்ட முகவரி யாருடையது? என விசாரிப்பதில்லை என கூறினார். அவரிடம் நீதிபதி வைத்திய நாதன் பெயரில் வந்த எஸ்.எம்.எஸ். எண் குறித்தும் விசாரித்தனர். அழைப்பு கடிதம் அனுப்பியது நீதிபதி வைத்தியநாதனுக்கு என்று தங்களுக்கு தெரியாது என்றும் வாசுதேவன் கூறினார்.
பின்னர் அவரது நிறுவனத்தில் சோதனை நடத்தி, அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இதே நிறுவனம் கோவை பீளமேடு பகுதியில் வேறு பெயரில் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து யார்-யாருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றும் 2-வது நாளாக வாசுதேவனிடம் விசாரணை நடைபெற்றது.
இதேபோல திருப்பூரில் உள்ள 3 நிறுவன உரிமையாளர்களிடமும் மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
வேலைவாய்ப்பு நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவனங்களை சிக்க வைப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டனரா? அல்லது நீதிபதிக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு யாராவது திட்டமிட்டு இதுபோன்று செயல்பட்டனரா? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
ஐகோர்ட்டு நீதிபதிக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பிய தனியார் நிறுவனங்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த நிறுவனங்களில் இருந்து ஏராளமானோருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்.
விசாரணை அறிக்கையை வருகிற 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்வோம். தற்போது நீதிபதியின் வீட்டு முகவரிக்கு வேலைக்காக அழைப்பு கடிதம் அனுப்பிய பின்னணி குறித்து விசா ரணை நடந்து வருகிறது. எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் எண்ணை கைப்பற்றி அந்த செல்போனுக்கு உரிய நபரிடமும் விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story