படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்தார்: மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு


படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்தார்: மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு
x
தினத்தந்தி 4 Oct 2017 5:45 AM IST (Updated: 4 Oct 2017 4:22 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கொடுங்கையூர், காந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரவி. டிரைவர். இவருடைய மகன் திலக்ராஜ் (வயது 16). சென்னையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

பெரம்பூர்,

இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து பாரிமுனையில் இருந்து மணலி சென்ற மாநகர பஸ்சில்(தடம் எண்: 64சி) ஏறி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
வியாசர்பாடி கணேசபுரம் அருகே சென்றபோது படிக்கட்டில் நின்ற திலக்ராஜ் திடீரென ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்தார். அப்போது பஸ் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து ஏற்பட்டவுடன் அந்த மாநகர பஸ் சம்பவ இடத்தில் இருந்து நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

போராட்டம்

* கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பரங்கிமலையை சேர்ந்த யுவராஜ்(25) என்பவரை தாக்கி செல்போனை பறித்து சென்ற கார்த்திக்(19), மகேஷ்(19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* சித்தாலப்பாக்கத்தை அடுத்த ஒட்டியம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* உள்ளகரத்தை சேர்ந்த நந்தகோபால்(57) வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

* திருவான்மியூரில் வீட்டில் மது விற்ற ஸ்ரீதரன்(27) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
* எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்ற பேகம்(48) என்ற பெண் மற்றும் அசாரூதின்(19) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் ஒரு வீட்டில் பிரபல பருப்பு நிறுவனத்தின் பெயர்களில் பாக்கெட் தயாரித்து பருப்பு விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு இருந்து 2 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.

* திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த இஷ்ராத் அகமது (29) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 6 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.

* நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிவகண்டன் (21), தங்கராஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story