வேலூர் மாவட்டத்தில் 31 லட்சம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய வாய்ப்பு
வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ராமன் நேற்று வெளியிட்டார். இந்த பட்டியல்படி 31 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வருகிற 30-ந் தேதி வரை பெயர் சேர்க்க, திருத்தம் செய்து கொள்ளலாம்.
வேலூர்,
1-1-2018-ம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனை முன்னிட்டு நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ராமன் நேற்று காலை வெளியிட்டார்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 31 லட்சத்து 13 ஆயிரத்து 258 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 15 லட்சத்து 28 ஆயிரத்து 341 பேர் ஆண்கள், 15 லட்சத்து 84 ஆயிரத்து 810 பேர் பெண்கள். 107 பேர் இதர வாக்காளர்கள் (மூன்றாம் பாலினத்தினர்). ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் 1,627 வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வருகிற 30-ந் தேதிவரை வைக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என சரிபார்த்து கொள்ளலாம். மேலும் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட வண்ண புகைப்படம் மட்டுமே இணைக்கவேண்டும்.
வருகிற 8 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டத்தை கூட்டி அந்தந்த ஊராட்சியின் வாக்காளர் பட்டியலை வாசித்து காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வருகிற 7-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய நாட்களில் வரைவு வாக்காளர் பட்டியலை பார்வைக்கு வைத்தல் என்ற பொருளுடன் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் நகல்கள் அனைத்து கட்சியினருக்கும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீகாந்த், உதவி கலெக்டர் செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பத்மநாபன், தேர்தல் தாசில்தார் சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story