ஆம்பூரில் பரபரப்பு பஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை
ஆம்பூர் பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ் ஏட்டு சரமாரியாக தாக்கப்பட்டார்.
ஆம்பூர்,
இது தொடர்பாக 6 பேரை போலீசார் அழைத்து சென்றதால் அவர்களது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவில் ஏட்டாக குணசேகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணிக்கு செல்வதற்கு பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் பஸ் நிலையத்திற்குள் இருந்த ஆட்டோ ஸ்டாண்டு பகுதிக்கு சென்று சிறுநீர் கழித்துள்ளார்.
அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தகராறு முற்றவே ஏட்டு குணசேகரனை ஆட்டோ டிரைவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தனசேகரன் மற்றும் போலீசார் பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து 6 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும் பஸ் நிலையத்திற்குள் இருந்த ஆட்டோக்களையும் போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். மேலும் இனிமேல் ஆட்டோவை நிறுத்தக்கூடாது என்று உத்தரவிட்ட போலீசார், பஸ் நிலைய சுற்றுச்சுவர் வழியாக கட்டைமேடு பகுதிக்கு செல்லும் வழிகளையும் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதனிடையே விசாரணைக்கு அழைத்து செல்லபட்டவர்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆம்பூரின் முக்கிய பிரமுகர்கள் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story