செல்போன்களுக்கான இசை பெருக்கி
தற்போது செல்போன் இசையை மெருகேற்றி தருவதற்காக ஸ்மார்ட்போன் ஆம்ப்ளிபயர் வந்துள்ளது.
இசையின் இனிமையை மேலும் மெருகேற்றுகிறது இந்தக்கருவி. இப்போதெல்லாம் செல்போன்களில் இசை கேட்கும்போது அதன் ஒலியை மட்டுமே கூட்டி குறைக்க முடிகிறது. முன்பெல்லாம் இசைத்தட்டுகள், கேசட்டுகள் வெளிவந்தபோது இசையின் தன்மையை மெருகேற்றி வழங்கும் ஆம்ப்ளிபயர் கருவி இருக்கும். தற்போது செல்போன் இசையை மெருகேற்றி தருவதற்காக ஸ்மார்ட்போன் ஆம்ப்ளிபயர் வந்துள்ளது. நியூயார்க்கை சேர்ந்த ‘மெக்கின்டோஸ்’ நிறுவனம் சிறிய கையடக்க கருவியாக இதை தயாரித்து வெளியிட்டுள்ளது. எம்.எச்.எ.50 எனப்படும் இந்த கருவி, ஆப்பிள் கருவிகளுடன் இணைந்து செயல்படும்.
Related Tags :
Next Story