வத்தலக்குண்டுவில் மதுக்கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
ம.தி.மு.க., மருதம் மக்கள் கழகம், இந்திய தேசிய லீக் கட்சி ஆகியவை சார்பில் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
வத்தலக்குண்டு,
ம.தி.மு.க., மருதம் மக்கள் கழகம், இந்திய தேசிய லீக் கட்சி ஆகியவை சார்பில் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. நகர செயலாளர் மருது ஆறுமுகம் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அருள்சாமி, மருதம் மக்கள் கழக மண்டல செயலாளர் கனகராஜ், இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் வதிலை நசீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவ–மாணவிகள், பெண்களின் பாதுகாப்பை கருதி வத்தலக்குண்டு டென்னிஸ் கிளப் சாலையில் உள்ள 2 மதுபான கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும். ஜெனிவாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை தாக்க முயன்ற சிங்களர்களை கண்டித்தும், மியான்மரில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.