விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை சோதனை செய்ய நவீன ஸ்கேனர் கருவிகள்


விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை சோதனை செய்ய நவீன ஸ்கேனர் கருவிகள்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை சோதனை செய்வதற்காக ரூ.28 லட்சம் செலவில் 2 நவீன ஸ்கேனர் கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வாகைகுளத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னைக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தூத்துக்குடி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிகளின் வருகை அதிகரித்து வருவதையொட்டி நவீன பாதுகாப்பு உபகரணங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. அதன்படி பயணிகளின் பெரிய பைகளை ஸ்கேன் செய்து பரிசோதனை செய்வதற்காக ரூ.17 லட்சம் மதிப்பில் ஒரு நவீன ஸ்கேனர் கருவியும், கைப்பைகளை பரிசோதனை செய்வதற்காக ரூ.11 லட்சம் மதிப்பிலான ஒரு ஸ்கேனர் கருவியும் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா நேற்று விமான நிலையத்தில் நடந்தது. விழாவுக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மேலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஸ்கேனர் கருவிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பயணிகளின் பொருட்கள் இந்த ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்பட்டது.

விழாவில் தூத்துக்குடி விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி விபின் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story