போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு 2 கைதிகள் தப்பி ஓட்டம்
நாகர்கோவில் சிறை அருகே போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு 2 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் ஒரே கைவிலங்கில் பூட்டி அவர்களை அழைத்து வந்த போதும், கைவிலங்கை உருவிவிட்டு ஆளுக்கொரு திசையில் தப்பி ஓடினர்.
நாகர்கோவில்,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் கார் திருட்டு போன வழக்கில் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். அதை தொடர்ந்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில் தங்கநகைகள், பொருட்களை போலீசார் மீட்டனர்.
பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் மும்பை சென்றார். அங்கும் பல்வேறு இடங்களில் அவர் கைவரிசை காட்டியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை போலீசார் அவரை கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்தனர்.
மும்பை சிறையில் அவருக்கும், அதே சிறையில் இருந்த சேலத்தை சேர்ந்த டேவிட் என்ற தேவேந்திரன் (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. டேவிட் மீதும் திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் மணிகண்டனும், டேவிட்டும் மும்பை சிறையில் இருந்து 2 மாதங்களுக்கு முன்பு தப்பினர். பின்னர் அவர்கள் நாகர்கோவிலுக்கு வந்து சுற்றிதிரிந்தனர். நாகர்கோவில் கோட்டாரில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த அவர்கள் 2 பேரையும் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அப்போது, மணிகண்டன் தப்பி ஓடிவிட்டார். டேவிட் சிக்கினார். அதற்கு மறுநாளில் நடந்த வாகன சோதனையில் மணிகண்டனும் போலீசாரிடம் பிடிபட்டார். அவர்கள் 2 பேர் கொடுத்த தகவலின் பேரில், ஏற்கனவே திருட்டு போன 3 மோட்டார் சைக்கிள்கள், 3 பவுன் நகை மற்றும் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதன்பின்னர் 2 பேரும் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில், ஒரு வழக்கு சம்பந்தமாக மணிகண்டன் மற்றும் டேவிட்டை ஆஜர்படுத்த நெல்லை கோர்ட்டுக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அவர்களை நெல்லை போலீசார் காவலில் எடுத்து விசாரித்ததாக தெரிகிறது. விசாரணைக்கு பின்னர் மணிகண்டனையும், டேவிட்டையும் நெல்லை போலீசார் மீண்டும் நேற்று இரவு நாகர்கோவில் சிறையில் அடைக்க அழைத்து வந்தனர். மணிகண்டன், டேவிட் ஆகிய 2 பேரின் கைகளையும், ஒரே கைவிலங்கில் பூட்டி போலீசார் அழைத்து வந்தனர்.
பாளையங்கோட்டை குற்றப் பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேன்ஸ் பாடினி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுககனி, ஏட்டு முருகன் ஆகியோர் அந்த 2 பேரையும் ஜீப்பில் அழைத்து வந்தனர்.
சிறை அருகே வந்து இறங்கிய போது ஒருவர் கைவிலங்கில் இருந்து எப்படியோ தனது கையை உருவிவிட்டார். இதனால் மணிகண்டனும், டேவிட்டும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் ஆளுக்கொரு திசையில் தப்பி ஓடினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெல்லை போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். ஆனால், அவர்களை பிடிக்க முடியவில்லை.
உடனடியாக குமரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். நாகர்கோவில் நகர் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தப்பிய ஓடிய மணிகண்டன், டேவிட் ஆகியோரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story