கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் பலி கணவன்-மனைவி படுகாயம்


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் பலி கணவன்-மனைவி படுகாயம்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஐந்துதலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி(வயது52). இவர் தனது மனைவி அமுதாவுடன் காரில் புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார். காரை கருணாநிதியே ஓட்டி வந்தார். பின்னர் இவர்கள் தஞ்சை-நாகை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். மாரியம்மன்கோவில் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிளில் மோதிய வேகத்தில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதி நின்றது. இதில் காரில் இருந்த கருணாநிதி, அமுதா ஆகியோர் காயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். கணவன், மனைவி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் டேவிட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே இறந்தவர் திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல்(33) என்றும், லோடு ஆட்டோ டிரைவராக பணி புரிந்து வந்தார் என்பதும் தெரியவந்தது. மற்றொருவர் இவரது நண்பர் அன்புமணி என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story