பெரம்பூரில் குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெரம்பூரில் குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூரில் குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர்,

பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் காதர் பாஷா. இவர் சொந்தமாக மினி வேன் ஓட்டி வருகிறார். இவருக்கும் பட்டாபிராமை சேர்ந்த மஸ்தானி (வயது 32) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

காதர் பாஷாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவரை பிரிந்து தாய் வீட்டில் மஸ்தானி வசித்து வந்தார். பின்னர் போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த மஸ்தானி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மஸ்தானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Next Story