சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு நிலவியது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி 4–வது நுழைவு வாயில் அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று ஒரு பெட்டி இருந்தது. இதை கண்ட மத்திய தொழிற்படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் உடனே இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தந்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் விரைந்து வந்து அப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி பெட்டியை சோதனை செய்தனர். அதில் மடிக்கணினி மற்றும் ஆவணங்கள் இருந்தன. விமானத்தில் ஏற வந்த பயணி யாராவது அதை விட்டு சென்று இருக்கலாம் என தெரியவந்தது.
பின்னர் அந்த பெட்டி விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சிக்கு முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோர் செல்ல இருந்த நேரத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story