கடந்த மாதத்தில் மட்டும் டெங்கு, எலிக்காய்ச்சலுக்கு 15 பேர் பலி
கடந்த மாதத்தில் மட்டும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சலுக்கு 15 பேர் பலியாகி உள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மும்பை,
மும்பையில் மழைக்கால நோய்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த நோய்களால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சியும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொசு ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதத்தில் (செப்டம்பர்) மட்டும் மும்பையில் 412 பேர் டெங்கு காய்ச்சலுக்கும், 59 பேர் எலிக்காய்ச்சலுக்கும், 842 பேர் மலேரியாவாலும் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளனர்.இவர்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேரும், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேரும் என 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என மாநகராட்சியின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சலுக்கு தலா 3 பேர் மட்டுமே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story