அதிர்ச்சி அளிக்கும் கருவிழி சவரம்
சீனாவைச் சேர்ந்த முதியவர் க்சியாங் காவு கடந்த 40 ஆண்டுகளாக வினோதமான முறையில், கருவிழி சவரம் செய்து வருகிறார்.
அட...! அது என்ன கருவிழி சவரம் என்று மிரட்சியோடு கேட்பவர்களுக்கு, அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் மருத்துவ பலன்களையும் கூறி அசத்துகிறார். ட்ரக்கோமா என்ற கண் சம்பந்தமான நோய்க்கு இந்த கருவிழி சவரம் மருந்தாக அமைகிறது. ‘‘கண்களில் சேரும் அழுக்குகளால் உருவாகும் ட்ரக்கோமா நோய்க்கு மருத்துவ மனைகளில் மட்டுமே மருத்துவம் செய்ய முடியும். ஆனால் என்னுடைய தாத்தா, அதற்கான மருத்துவ முறைகளை வீட்டிலேயே செய்து கொள்ள வழிகாட்டினார். அதை முறையாக பயின்று இன்று பலருக்கும் கருவிழி சவரம் செய்து உதவு கிறேன். கண்களில் கூர்மையான கத்தியை பயன்படுத்துவது கடினமான செயல் என்றாலும், முறையான பயிற்சி என்னை நிபுணராக மாற்றிவிட்டது. இதுவரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு கருவிழி சவரம் செய்திருக்கிறேன்’’ என்கிறார், க்சியாங்.
Related Tags :
Next Story