தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24–ந் தேதி நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24–ந் தேதி நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
குறைதீர்க்கும் நாள்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில், பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் இருக்கும் போது, மரணம் அடைந்தவர்கள் ஆகியோரது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் ஏற்படும் குறைகளை நேரடியாக கேட்டறிந்து நிறைவேற்றும் வகையில் ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 24–ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குனரால் நடத்தப்பட உள்ளது.
கோரிக்கைகள்எனவே ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அவர்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை, அவர்கள் கடைசியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலகத்தின் பெயர் மற்றும் பதவி, ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய கொடுப்பாணை எண், ஓய்வூதியம் பெற்று வரும் கருவூலத்தின் பெயர், வீட்டு முகவரி, கோரிக்கை எந்த அலுவலரிடம் நிலுவையில் உள்ளது ஆகிய விவரங்களுடன் மாவட்ட கலெக்டர், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை 2 பிரதிகளில் வருகிற 10–ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் விண்ணப்பித்த ஓய்வூதியதாரர்கள் 24–10–17 அன்று நடத்தப்படும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.