டெங்கு காய்ச்சலால் பாதிப்பு: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2 குழந்தைகள் சாவு
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 2 குழந்தைகள் நேற்று பரிதாபமாக இறந்தனர்.
மதுரை,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சமீபத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பலியாகி உள்ளனர். மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் கவினேஷ்குமார்(வயது 4½). இவனுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் இருந்தது. தனியார் மருத்துவமனையில் அவனது பெற்றோர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சில நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனில்லை. அவனை பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர்.
இதனையடுத்து கடந்த 2-ந்தேதி அவனை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை கவினேஷ்குமார் இறந்தான்.
இதேபோல திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை சேர்ந்த சிறுமி செர்லின்பனிதா(8). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது இதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டாள். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தாள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 2 குழந்தைகள் ஒரே நாளில் இறந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story