வீட்டில் தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
பவானி அருகே வீட்டில் தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
பவானி,
பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை வேதகிரிபுரத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி உஷா (27). இந்த நிலையில் அருகில் உள்ள வீட்டில் உஷா நேற்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வந்ததை உஷா கண்டார். மேலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
இதுபற்றி அறிந்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மெத்தை, டி.வி., மிக்சி, கிரைண்டர், உணவு பொருட்கள், துணிகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது,’ என்றனர்.

Related Tags :
Next Story