சின்னமுட்லு அணைத்திட்டம் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு

வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டி ஊராட்சி சின்னமுட்லு கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் திட்டம் சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் சாந்தா திட்டத்தளத்தினை நேரில் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நடப்பு நிதியாண்டில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கையில் தமிழக முதல்-அமைச்சர், மலையாளப்பட்டி சின்னமுட்லுவில் அணைக்கட்டு கட்ட திட்ட ஆய்வு பணிக்காக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், வேப்பந்தட்டை தாசில்தார் பாரதிவளவன், வட்டார வளர்ச்சி அதிகாரி மரியதாஸ், மருதையாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சித்தார்த்தன், திட்டம் மற்றும் வடிவமைப்பு உபகோட்டத்தினை சார்ந்த பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story