அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க தீவிர விழிப்புணர்வு முகாம்
அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க தீவிர விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தாமரைக்குளம்,
டெங்கு கொசு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். அதை தொடர்ந்து மாவட்ட கலெக் டர் லட்சுமிபிரியா தலைமையில் அனைத்து அரசு அதிகாரிகள், மாணவ-மாணவிகள் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-
நேற்று முதல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தினம் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், முகாம்கள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இறை வழிபாட்டின் போது மாணவ, மாணவியர்களுக்கு டெங்கு குறித்து உறுதிமொழி ஏற்றல், மேலும் தங்களுடைய வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்திட விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு ஏதேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி அதற்குண்டான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும். உப்பு கரைசல் எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பூந்தொட்டி, குளிர்சாதனப்பெட்டி அடி பாகத்தில் தேங்கும் நீர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள், டீ கப்புகள், பாலித்தீன் பைகள் போன்றவைகளில் நீர் தேங்காத வண்ணம் உடனடியாக அகற்றிட வேண்டும்.
நம்முடைய சமுதாயத்திற்கு நாம் தான் உதவ வேண்டும். இதன் அடிப்படையில் தங்களுடைய வீட்டிற்கு அருகே உள்ள சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாங்களே மெடிக்கலுக்கு சென்று மாத்திரை மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. மருந்து விற்பனை செய்பவர்களும் டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்க கூடாது. நாம் அனை வரும் ஒன்று சேர்ந்து டெங்கு இல்லாத மாவட்டமாக அரியலூரை உருவாக்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் துணை இயக்குனர் சுகாதார பணிகள் ஹேமந்த்சந்த்காந்தி, அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத், கடுகூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமாமகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், பயிற்சி நிலைய முதல்வர் ராதாகிருஷ்ணன், தனபால் ஆகியோர் தலைமை தாங்கி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதேபோல் சுண்டகுடி காட்டுப்பிரிங்கியம், தண்டலை பொய்யாத நல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டதாக வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story