மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் திருச்சி வழியாக கல்லணை சென்றடைந்தது
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் திருச்சி வழியாக கல்லணை சென்றடைந்தது. கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
திருச்சி,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியை தொடங்குவதற்கு வசதியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2-ந்தேதி வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணை வழியாக திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நேற்று அதிகாலை 2.20 மணிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து மதகுகளின் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீர் கம்பரசம் பேட்டை தடுப்பணை வழியாக நேற்று காலை 6 மணி அளவில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையை கடந்து கல்லணையை சென்றடைந்தது.
ஸ்ரீரங்கத்தில் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை காவிரி மகா புஷ்கர விழா நடந்த போது பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீரும் 2 நாட்களில் குறைக்கப்பட்டு குடிநீர் தேவைக்காக குறைந்த அளவே திறந்து விடப்பட்டதால் திருச்சியில் காவிரி ஆறு மணற்பாங்காகவே காட்சி அளித்தது. இந்நிலையில் தற்போது காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
காவிரியின் கிளை வாய்க்கால்களான உய்ய கொண்டான், கட்டளை மேட்டு வாய்க்கால், புள்ளம்பாடி உள்ளிட்ட 17 வாய்க்கால்கள் மூலம் திருச்சி, கரூர் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது . இந்த வாய்க்கால்களிலும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதுபற்றி பொதுப்பணித்துறையின் ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது ‘காவிரியின் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பதற்கு தமிழக அரசின் உத்தரவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அரசு உத்தரவு வந்ததும் காவிரியின் கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்படும்’ என்றனர்.

Related Tags :
Next Story