கூடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகை
ஓட்டுனர் உரிமத்தை விரைவாக வழங்க கோரி கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை டிரைவர்கள், பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கூடலூர்,
கூடலூர் மாக்கமூலாவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கிரேடு-1,2 மற்றும் கண்காணிப்பாளர், அலுவலக எழுத்தர் பணியிடங்கள் உள்ளன. இதில் கடந்த சில ஆண்டுகளாகவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.
இதேபோல் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதி மக்கள் மற்றும் வாகன டிரைவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுதல் உள்பட பல்வேறு தேவைகளுக்காக கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு இதுவரை நிரந்தரமாக ஆய்வாளர்கள் பணியாற்றுவது இல்லை. மேலும் அலுவலக பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இதனால் ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் உள்பட பல்வேறு உரிமங்கள் பெற முடியாமல் அலைக் கழிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் ஊட்டியில் பணியாற்றி வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஒருவர் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் கூடலூர் வந்து வாகன தணிக்கை செய்தல், ஓட்டுனர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று ஊட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்தியகுமார் கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார்.
அப்போது ஏராளமான வாகன டிரைவர்கள், பொதுமக்கள் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கூடுதல் பொறுப்பு கவனித்து வந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்தியகுமாரிடம், கூடலூருக்கு நிரந்தர ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வந்து பணியாற்றுவதால் மாதக்கணக்கில் ஓட்டுனர் உரிமத்துக்காக காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. ஓட்டுனர் உரிமத்தை விரைவாக வழங்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார், பணியிடங்கள் நிரப்புவதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளக்கம் அளித்தார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து வாகன டிரைவர்கள், பொதுமக்கள் கூறியதாவது:-
பல ஆண்டுகளாக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக இருந்து வருகிறது. அவ்வாறு புதியதாக மோட்டார் வாகன ஆய்வாளர் நியமிக்கப்பட்டால் ஒரு சில மாதங்களில் பணியிட மாறுதல் பெற்று விடுகின்றனர். புதியதாக ஓட்டுனர் உரிமம் பெற முடிவது இல்லை. வாகன உரிமம் பெற முடிய வில்லை.
தற்போது அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்க கூடாது என உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய உரிமம் பெறுவதற்காக பொதுமக்கள் வந்து கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது.
வாரத்துக்கு ஒருமுறை ஊட்டியில் இருந்து வரும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஒரே நாளில் அனைத்து பணிகளையும் பார்க்க முடிவது இல்லை. இதனால் டிரைவர்கள், பொதுமக்கள் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதேபோல் தனியார் வாகனங்கள் விதிமுறைகளை மீறி சுற்றுலா வாகன தொழிலுக்கு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story