கிராம வளம் மற்றும் தூய்மைக்கான விழிப்புணர்வு பிரசார ரதம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கிராம வளம் மற்றும் தூய்மைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திட இரு வார காலத்திற்கு ரதத்தின் மூலம் நடைபெற உள்ள பிரசார ரதத்தை கலெக்டர் லதா தொடங்கி வைத்தார்.
சிவகங்கை,
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கிராம வளம் மற்றும் தூய்மைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திட இரு வார கால பிரசார இயக்கம் நடைபெறுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு ரதத்தின் மூலம் கிராமங்களில் பிரசாரம் செய்ய உள்ளனர். இந்த ரதத்தின் தொடக்க விழா சிவகங்கையில் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் லதா விழிப்புணர்வு ரதத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இரு வார கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஊராட்சிகளில் 18 வயது முதல் 35 வயது நிரம்பிய கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும் கைப்பேசி மற்றும் செயலி மூலம் இணைய தள முகவரியில் இளைஞர்கள் தங்களின் பெயர் மற்றும் பயிற்சி பெற விரும்பும் விவரத்தினை தாங்களே பதிவு செய்ய பயிற்சி அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியுடன் ஆங்கிலம் மற்றும் கணினி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு கிராமப்புற ஏழை மகளிரை சுய உதவிக் குழுவில் உறுப்பினராக சேர்த்தல், மகளிருக்கு தேவைக்கேற்ப பயிற்சி அளித்தல், குழுவின் பயனுள்ள செயல்பாட்டிற்கு நிதி ஆதரவு அளித்தல், பயிற்சி அளித்தல் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வங்கி கடனுதவி பெற உதவி செய்தல் போன்ற பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, மகளிர் திட்ட இயக்குனர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story