காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்
காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனை அல்லது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் அறிவுரை வழங்கி உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொது சுகாதார துறை சார்பில் டெங்கு தடுப்பு தினவிழா நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் டெங்கு தடுப்பு தின உறுதிமொழி மற்றும் தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜன் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு வைரஸ் காய்ச்சலை பொறுத்தவரையில் பிற வைரஸ் காய்ச்சல் போன்று இதுவும் ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலே ஆகும்.
சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுவினால் இந்த வைரஸ் காய்ச்சல் உருவாகிறது. எனவே இந்த கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதன் மூலம் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும். வீட்டில் உள்ள குடிக்க மற்றும் பிற பயன்பாட்டிற்காக தேக்கி வைத்துள்ள தண்ணீர் குடங்கள், கீழ்நிலை தொட்டிகள், மேல்நிலை தொட்டிகள் ஆகியவற்றை கொசு புகாத வகையில் மூடி வைத்தல் வேண்டும். மேலும், வீட்டைச்சுற்றி தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் கப்புகள், உரல், மண் சட்டிகள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல் ஆகியவற்றை அப்புறப்படுத்தி மழைநீர் தேங்காத வகையில் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
காய்ச்சல் அறிகுறி இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். சுயமாக மருந்து மாத்திரைகளை கடைகளில் வாங்கி உட்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலைய செவிலியர்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெறும் சர்க்கரை உப்பு கரைசலை உட்கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் நீர் சத்து இழப்பை தடுத்து டெங்குவினால் ஏற்படும் இறப்பினை தடுக்கலாம். நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் டெங்குவினால் ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம்.
கொசு ஒழிப்பு பணிகளில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் முனைப்போடு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட உணவுப்பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பார்த்திபன் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story