கடல் அலையில் மின்சாரம் தயாரிப்பு ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


கடல் அலையில் மின்சாரம் தயாரிப்பு ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:22 AM IST (Updated: 6 Oct 2017 4:21 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின்

விருதுநகர்,

சார்பில் நடந்த மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டிகளை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவர் அப்போது தெரிவித்ததாவது:-

தமிழகமாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், நவீன தொழில்நுட்பம் சார்ந்த எண்ணங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஒரு களத்தினை ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் மாநில அளவில் முதல் பரிசு பெறும் படைப்பிற்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழும்், இரண்டாம் பரிசு பெறும் படைப்பிற்கு ரூ.50 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

அதன் முதற்கட்டமாக மாவட்ட அளவில் திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் படைப்பு மாநில அளவில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் தொழில் திறன் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் முக்கியமாகும். மாணவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய வேண்டும். சூரியசக்தியில் மின்சாரம் தயாரிப்பதற்குத் தேவையான சூரியஒளியை மின்னாற்றலாக மாற்றும் சூரியஒளி தகடுகளை தயாரிக்கும் முறை குறித்தும் குறைந்த விலையில் அதனை தயாரிப்பதற்கும் ஆய்வுகள் செய்து பொதுமக்களுக்கும், நாட்டிற்கும் உதவ வேண்டும்.

வறட்சிக்காலத்திலும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அதிக விளைச்சலை தருவதற்கான தொழில்நுட்ப சாதனங்களை தயாரிப்பதிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும். இந்தியாவில் கடல்நீர் அதிகமாக உள்ளது. இக்கடல் நீரை அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது குறித்தும் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு பயன்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து பொதுமக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். மரபுசாரா எரிசக்தியில் மின்சாரம் கண்டறிதல், கடல்அலையில் மின்சாரம் தயாரித்தல், சூரியசக்தி மின்சாரம் குறித்தும் ஆராய்ந்து நாட்டினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திறனாய்வு போட்டிகளில் மொத்தம் 104 படைப்புகள் இடம் பெற்றன.
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த படைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகளையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

Next Story