லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:43 AM IST (Updated: 6 Oct 2017 4:43 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பெங்களூரு,

பெங்களூரு திலக்நகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையை சட்டவிரோதமாக இரவில் நீண்டநேரம் திறந்து வைத்து வியாபாரம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அந்த மதுக்கடையின் உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றும் 2 மேலாளர்களை திலக்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வீர்சேட் பிடித்து சென்றார். பின்னர் அவர்கள் 3 பேரையும் விடுவிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி மதுக்கடை உரிமையாளரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வீர்சேட் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி போலீஸ் கமிஷனர் சுனில்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் போலீஸ் அதிகாரிக்கு, போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவிட்டு இருந்தார். அந்த விசாரணையில், மதுக்கடை உரிமையாளர், 2 மேலாளர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வீர்சேட் பிடித்து சென்றதும், அவர்களை விடுவிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் தன்வீர்சேட்டை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Next Story