7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டது.
காரைக்கால்,
ஆனால் உள்ளாட்சித்துறையின் கீழ் இயங்கும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. இதை கண்டித்தும், ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் பல்வேறு கட்ட போராட்டங்களை உள்ளாட்சி ஊழியர்கள் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் பேச்சுவார்த்தை நடந்தப்பட்டது. அப்போது ஒரு மாத காலத்திற்குள் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அமல்படுத்துவதாக தெரிவித்தார். ஆனால் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இதனை கண்டிக்கும் வகையிலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் காரைக்கால் நகராட்சி மற்றும் திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, நிரவி, திரு-பட்டினம் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அனைவரும் நேற்று ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு காரைப்பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஜெய்சிங், கவுரவ தலைவர் ஜார்ஜ், பொதுச்செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது 7-வது ஊதியக்குழு பரிந்துரையை உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கும் உடனே அமல்படுத்தவேண்டும் என்று ஊழியர்கள் கோஷமிட்டனர்.
போராட்டம் குறித்து பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கையை செயல்படுத்த அரசு தவறினால் வருகிற 23-ந்தேதி முதல் ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் அனைவரும் தொடர் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றார்.

Related Tags :
Next Story