‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி தூத்துக்குடி சிவன்கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி தூத்துக்குடி சிவன்கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 7 Oct 2017 3:00 AM IST (Updated: 6 Oct 2017 6:46 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சிவன் கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணியை கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று காலை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிவன் கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணியை கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று காலை தொடங்கி வைத்தார்.

தெப்பக்குளம்

தூத்துக்குடி மாநகரின் மைய பகுதியில் சிவன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பக்கும் கீழரவீதியில் உள்ளது. இந்த தெப்பக்குளம் போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிரம்பி கிடந்தது.

இதனால் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையில் தெப்பக்குளம் அமைந்து இருந்தது. இதுகுறித்து, ‘தினத்தந்தி‘யின் நகர்வலம் பகுதியில் செய்தி வெளியானது.

தூர்வாரும் பணி

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ சார்பில் குப்பை மண்டி கிடந்த தெப்பக்குளத்தை தூர்வாரி சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை தூர்வாரும் பணி தொடங்கியது. இந்த பணியை கீதாஜீவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் மின்மோட்டார் மூலம் முழுமையாக வெளியேற்றும் பணி நடந்தது. அதன்பிறகு தெப்பக்குளத்தில் தேங்கி கிடக்கும் கழிவுகள் அனைத்தும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் தெப்பக்குளத்தில் புதிதாக தண்ணீர் நிரப்பவும், அதில் மீன்களை பாதுகாப்பாக வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வணிகர் பேரமைப்பு தலைவர் சோலையப்பராஜா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் கவுன்சிலர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story