தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2017 2:30 AM IST (Updated: 6 Oct 2017 8:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு தி.மு.க.வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு தி.மு.க.வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று மாலை அங்குள்ள அனல்மின்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொருளாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் மரியஜான் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் உள்ள 5 மின்உற்பத்தி எந்திரங்களிலும் இ.எஸ்.பி என்னும் மாசு கட்டுப்படுத்தும் அமைப்பை நவீனப்படுத்த வேண்டும். அனல்மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை தடையின்றி தொடர்ந்து வழங்க வேண்டும். அனல்மின்நிலையத்தை மூடிவிடாமல் தொடர்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

யார்–யார்?

ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ், பொறியாளர் அணி அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story