காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை அடுத்த உளுந்தை கிராமத்தில் தனியார் நிறுவனம் உள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை அடுத்த உளுந்தை கிராமத்தில் தனியார் நிறுவனம் உள்ளது. அங்கு வடமாநிலத்தை சேர்ந்த டேட்பிரசாத்சக்கோடா (வயது 37) என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காவலாளியாக பணியாற்றி வந்தார். அவர் அந்த நிறுவனம் அருகே அறையெடுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த டேட்பிரசாத்சக்கோடா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி சாரதா மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story