தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2017 4:30 AM IST (Updated: 7 Oct 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் செயல்படுத்தக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.5ஆயிரம் தீபாவளி பண்டிகை உதவித் தொகை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் செயல்படுத்த வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக தினசரி ரூ.400 வழங்க வேண்டும்.

வேலை செய்த தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் தங்கமணி, மாவட்ட தலைவர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கலெக்டர் லதாவிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.


Next Story