ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு,
எஸ்.சி, எஸ்.டி மற்றும் தலித் கிறிஸ்துவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் சார்பில் ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பவானி கிறிஸ்துநாதர் ஆலய பாதிரியார் ஜேக்கப் லிவிங்ஸ்டன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் என்.விநாயகமூர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை தலைவர் என்.ஆர்.வடிவேல், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரா.சிந்தனை செல்வன் ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பழனிசாமி, ஆதித்தமிழர் பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் வீரக்குமார், இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் செயலாளர் அம்ஜத்கான், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி, ஈரோடு கிழக்கு தொகுதி துணை செயலாளர் ஒயிட் சாதிக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.