திருப்பூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2017 4:15 AM IST (Updated: 7 Oct 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பாக மாநகராட்சி அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்,

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பாக மாநகராட்சி அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, நிர்வாகிகள் பழனிசாமி, தருமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.400 வழங்க வேண்டும். சம்பள தொகையை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். வறட்சியால் வேலையிழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் தீபாவளி பண்டிகை உதவித்தொகையாக வழங்க வேண்டும். தனி நபர் கழிப்பிடம் கட்ட ரூ.12 ஆயிரம் வழங்குவதை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

 வேலை உறுதியளிப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்தி வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.


Next Story