பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2017 4:30 AM IST (Updated: 7 Oct 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்திட வேண்டும். 200 நாட்களுக்கு வேலை வழங்குவதுடன் குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 வழங்க வேண்டும். வேலை செய்த தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் ஊதியம் வழங்க வேண்டும். வறட்சியால் வேலை வாய்ப்பை இழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் தீபாவளி பண்டிகை உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன், மாவட்ட தலைவர் வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.பி. அப்பாதுரை, மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகரஆசாத், மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன், நகர செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் புலிகேசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story