தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பா.ஜனதா கட்சியை வலுப்படுத்த வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு


தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பா.ஜனதா கட்சியை வலுப்படுத்த வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 7 Oct 2017 4:45 AM IST (Updated: 7 Oct 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பா.ஜனதா கட்சியை வலுப்படுத்த வேண்டும் என பொன்.ராதமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பா.ஜனதா கட்சியை வலுப்படுத்த வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.தாகிருஷ்ணன் கூறினார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் பா.ஜனதா கட்சி பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்பாலு வரவேற்றார். இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜனதா கட்சி ஒரு உத்வேகத்துடன் வளர்ந்து கொண்டு இருக்கிறது. பா.ம.க. முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளராக இருந்த அகோரம் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இதேபோல் வருகிற 10-ந் தேதி அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நடைபெற உள்ள விழாவில் கட்சியில் இணைகிறார். மேலும், கோவையில் இருந்து டி.கே.நாகராஜன், வேலூரில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் உள்பட பலர் கட்சியில் இணைகிறார்கள்.

கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் அழிந்து கொண்டுதான் உள்ளது. தமிழக மக்கள் அவர்களது முயற்சியால்தான் வளர்ந்து வருகின்றனர். விவசாயம் நமது உயிராகும். காவிரி நீர் பெறுவது நமது உரிமையாகும். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக கர்நாடகாவில் பா.ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோதே காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை தர வேண்டும் என்று தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் கடற்கரை சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி தருவதாக மத்திய அரசு அறிவித்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அதற்கு தமிழகம் ஒத்துழைப்பு தரவில்லை. இந்த சாலை அமைக்கப்பட்டால் 60 சதவீதம் போக்குவரத்து தமிழகத்திற்கு வந்துவிடும். இதன் மூலம் சுற்றுலா, வணிகம் உள்ளிட்டவை பெருகி தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். சென்னை-கன்னியாகுமரி வரை கடற்கரை வழியாக ரெயில்பாதை அமைக்க உள்ளோம்.

ரூ.200 கோடி மதிப்பீட்டில் திருவனந்தபுரம்- சென்னை வரை கடல்மார்க்கமாக செல்லவும் ஏற்பாடு செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களும் ஒன்று சேரும்போது தான் தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும். தமிழகத்தில் தொழில், வேலை வாய்ப்பு போன்ற முன்னேற்றத்தை கொண்டுவர பா.ஜனதா ஆவலாக உள்ளது. தமிழக மீனவர்களுக்காக ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தின் முன்னேற்றதுக்கு பா.ஜனதா கட்சியை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், கோட்ட பொறுப்பாளர் தங்க.வரதராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story