பெரம்பலூர் நீதிமன்றத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் நீதிமன்றத் தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் தலைமையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பாலராஜ மாணிக்கம் தலைமை தாங்கி பேசும்போது, உணவு முறையில் நாம் கொண்டு வரும் மாற்றங்களும், சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளாமல் இருப்பதும் தான் நோய்க்கு அச்சாரமாக இருக்கின்றன. எனவே டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக நமது சுற்றுப்புறத்தில் கொசுக் களின் உற்பத்தி பெருக விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி விஜயகாந்த் முன்னிலை வகித்தார்.
ஏடிஸ் கொசு உற்பத்தியாவது எப்படி?
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்கிற ஒருவகை கொசு வினால் தான் பரவி வருகிறது. இவை நன்னீரில் தான் உற்பத்தியாகும். எனவே வீடுகளுக்கு அருகே உரல், டயர், வேண்டாத பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். டெங்கு வின் அறி குறி தென்பட்டால் உடனே அரசு மருத்துவ மனையை அணுகி உடலை பரிசோதித்து கொள்வது நல்லது. டெங்கு காய்ச்சலுக் கான சிறந்த மருந்தாக நிலவேம்பு கசாயம் இருக்கிறது.கடைகளில் நிலவேம்பு என்ற பெயரில் விற்கப்படும் போலி யான பொடிகளை வாங்கிட வேண்டாம். நிலவேம்பு கசாயத்தை குடிப்பதன் மூலம் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதனால் காய்ச் சலிலிருந்து எளிதில் விடு படலாம் என அரசு மருத்துவ மனை சித்தமருத்துவப்பிரிவு டாக்டர்கள் விஜயன், ராகுல் ஜீ ஆகியோர் பேசினர்.
அப்போது இந்த முகாமில் கலந்து கொண்ட வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் டெங்கு காய்ச்சல் குறித்து தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங் களை கேட்டு தெரிந்து கொண் டனர். அப்போது மூத்த வழக்கறிஞர் வாசுதேவன் பேசிய போது, பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சில காலிமனைகளில் புதர் மண்டி வேண்டாத பிளாஸ் டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவை கிடக்கின்றன.
இவை டெங்கு கொசு உற்பத்திக்கு அடித்தளம் இடும் வகையில் இருக்கின்றன. எனவே காலிமனைகளில் உள்ள வேண்டாத பொருட்களை அகற்ற மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிக்கு நீதித்துறை சார்பில் பரிந்துரை செய்ய வேண்டும் என்றார். அப்போது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜ மாணிக்கம் பதில் கூறினார். மேலும் நீதிமன்ற வளாகத்தை தூய்மை செய்ய குழு அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து முகாமில் பங்கேற்றவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப் பட்டது. சட்டப்பணிகள் குழு சார்பில் நீதிமன்ற வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுவது தமிழகத் திலேயே இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முகாமில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதிகள் ஜெயந்தி, வினோதா மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலு வலர் வெள்ளைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story