சேலம் செரிரோட்டில் ஆட்டோ மோதி ரெயில்வேகேட் உடைந்தது போக்குவரத்து பாதிப்பு
சேலம் முள்ளுவாடி பகுதியில் செரி ரோடு, பிரட்ஸ் ரோடு ஆகிய 2 இடங்களில் ரெயில்வே கேட் உள்ளன.
சேலம்,
இந்த வழித்தடத்தில் சேலம் ஜங்சனில் இருந்து விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரெயில், ஜங்சனில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு சேலம் ஜங்சனில் இருந்து விருத்தாசலத்திற்கு பயணிகள் ரெயில் சென்றது. அந்த வேளையில் பிரட்ஸ் ரோடு, செரிரோடு பகுதியில் உள்ள 2 ரெயில்வே கேட்களும் மூடப்பட்டன. அந்த வேளையில் ரெயில்வே பாலத்தின்கீழ் உள்ள தூண்களுக்கு இடையே ஆட்டோ ஒன்று வேகமாக வந்து, ரெயில்வே கேட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கேட் உடைந்தது.
ரெயில் சென்ற பின்னரும் கேட் உடைந்து தண்டவாளத்தில் கிடந்ததால், அவ்வழியாக எவ்வித வாகனங்களும் செல்லமுடியவில்லை. மாறாக பிரட்ஸ் ரோட்டில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து அனைத்து வாகனங்களும் செல்ல முயன்றன. இதனால், சுமார் 30 நிமிடம் கடுமையாக வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. அதன் பின்னர் ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் விரைந்து வந்து உடைந்த கேட்டை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story