கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் சுற்றுசூழல் பூங்கா பணிகளை கலெக்டர் ஆய்வு


கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் சுற்றுசூழல் பூங்கா பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2017 4:38 AM IST (Updated: 7 Oct 2017 4:38 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகுதியில் அரசுக்கு சொந்தமான 31.64 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த பழத்தோட்டம் உள்ளது. இதில் பல்வேறு வகையான மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன.

கன்னியாகுமரி,

இப்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க அரசு ஏற்பாடு செய்தது. இதற்காக ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. அதனை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதையடுத்து நேற்று காலை மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பழத்தோட்டம் சென்று அங்கு நடைபெறும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

அவருடன் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அசோக் மாக்ரின், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதின், உதவி இயக்குனர் ஷீலாஜான், வேளாண்மை துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆனந்த்பாபு, கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை அலுவலர் திலீப், மண்வள பாதுகாப்பு அதிகாரி அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story