களியக்காவிளை அருகே தங்கத்தில் செய்த அம்மன் முகம் உள்பட கிலோ கணக்கில் நகைகள் பறிமுதல்
களியக்காவிளை அருகே மோசடி நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
களியக்காவிளை,
அங்கு தங்கத்தால் செய்த அம்மன் முகம் உள்பட கிலோ கணக்கில் நகைகள், கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை அருகே மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற தனியார் நிதி நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இங்கு குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைப்புத்தொகையாக பணம் செலுத்தி இருந்தனர்.
கடந்த ஓணம் பண்டிகையின் போது நிதி நிறுவனத்தை திடீரென பூட்டி விட்டு உரிமையாளர் குடும்பத்துடன் தலைமறைவானார். இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுக, சிறுக சேமித்த பணத்தை இழந்து விட்டோமே? என ஆத்திரம் அடைந்து, போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே நிதி நிறுவனத்தை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால், உரிமையாளர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்தநிலையில் நிதி நிறுவனத்தின் முன்பு போராட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். எனவே கேரள மாநிலம் பாறசாலையில் வாடிக்கையாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 5 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கிலோ கணக்கில் தங்க நகைகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. மேலும் தங்கத்தினால் செய்த அம்மன் முகத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இது அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணம், நகைகள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பல கோடி ரூபாய் மோசடியில் தொடர்புடைய நிதி நிறுவன உரிமையாளர் தலைமறைவாக இருக்கும் நிலையில், அந்த நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் போலீசாருடன் இணைந்து வருவாய்த்துறையினர் நடத்திய இந்த அதிரடி சோதனை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story