ஏரியில் தவறி விழுந்த தாய்–மகன் நீரில் மூழ்கி சாவு


ஏரியில் தவறி விழுந்த தாய்–மகன் நீரில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 7 Oct 2017 5:10 AM IST (Updated: 7 Oct 2017 5:10 AM IST)
t-max-icont-min-icon

மாலூர் தாலுகாவில் ஏரியில் தவறி விழுந்த தாய்–மகன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா ராமேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சையத் பகதூர். இவரது மனைவி ‌ஷகானா தாஜ் (வயது 38). இந்த தம்பதியின் மகன் முஸ்தாக் (8). இந்த நிலையில் கடந்த 2–ந்தேதி ‌ஷகானா தாஜ் தனது மகன் முஸ்தாக்குடன் மாலூர் அருகே சிவாரிபட்டணத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கணவர் சையத் பகதூரிடம் கூறிச் சென்றார்.

மறுநாளான 3–ந்தேதி கணவருக்கு போன்செய்த ‌ஷகானா தாஜ், இன்றே தான் புறப்பட்டு ராமேனஹள்ளிக்கு வந்துவிடுவதாக கூறியுள்ளார். அதன்படி அவர் மகனுடன் தாய் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் அவர்கள் இரவு நீண்ட நேரம் ஆகியும் ராமேனஹள்ளிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சையத் பகதூர் மற்றும் அவரது உறவினர்கள் மாயமான தாய்–மகனை தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராமேனஹள்ளி அருகே காலேகவுடான ஏரியில் பெண், சிறுவன் உடல்கள் மிதந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும் மாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு விசாரித்தனர். அப்போது ஏரியில் பிணமாக கிடந்தவர்கள் ‌ஷகானா தாஸ், அவரது மகன் முஸ்தாக் ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் ஏரிக்கரை ஓரமாக நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது தவறி ஏரிக்குள் விழுந்ததும், இதில் 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பலியான 2 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக மாலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக மாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Related Tags :
Next Story