மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள போட்டிகள் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
வேலூர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள போட்டிகள் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக சீனாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டியில் ஈட்டி எறிதலில் பங்கேற்ற வெங்கடாசலம் கலந்து கொண்டார்.
போட்டியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பேசுகையில், ‘இப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ள நீங்கள் அனைவருமே வெற்றியாளர்கள். வெற்றி பெறுவது மட்டுமே வெற்றி அல்ல. போட்டிகளில் கலந்து கொள்வதே முதல் வெற்றி. மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். உடலில் உள்ளது ஊனமல்ல. மனதில் ஊனமிருந்தால் அதுதான் ஊனம்’ என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கஜேந்திரன், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.