மாணவ– மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பிளஸ்–1, பிளஸ்–2 மாணவ– மாணவிகளுக்கான பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடந்தது.
வேலூர்,
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பிளஸ்–1, பிளஸ்–2 மாணவ– மாணவிகளுக்கான பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. போட்டியை வேலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை துணை இயக்குனர் லலிதா தொடங்கி வைத்தார்.
போட்டியில் 170 மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கவிதை போட்டியில் ஒடுகத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்–2 மாணவி பிருந்தா, கட்டுரைப்போட்டியில் வேலூர் கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி பிளஸ்–2 மாணவர் பூவரசன், பேச்சுப்போட்டியில் திருப்பத்தூர் முனுசாமி சந்திரனார் மேல்நிலைப்பள்ளி பிளஸ்–1 மாணவி ரித்திகா ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.
முதல் 3 இடங்களை பிடித்த மாணவ– மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் முறையே வழங்கப்படுகிறது. மேலும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.