எழுமலை அருகே மலை உச்சியில் பாறையில் சோறு போட்டு சாப்பிட்ட கிராமமக்கள்

எழுமலை அருகே மலை உச்சியில் பாறையில் சோறு போட்டு சாப்பிட்ட கிராமமக்கள்
x
தினத்தந்தி 8 Oct 2017 3:45 AM IST (Updated: 8 Oct 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம் எழுமலை அருகே பேரையூர் தாலுகாவில் உள்ளது எம்.கல்லுப்பட்டி. இந்த ஊரில் ஓநாய்கரடு என்றழைக்கப்படும் நீலமேகப்பெருமாள் கோவில் மலை உச்சியில் உள்ளது.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் எழுமலை அருகே பேரையூர் தாலுகாவில் உள்ளது எம்.கல்லுப்பட்டி. இந்த ஊரில் ஓநாய்கரடு என்றழைக்கப்படும் நீலமேகப்பெருமாள் கோவில் மலை உச்சியில் உள்ளது.

இந்த கோவிலில், எம்.கல்லுப்பட்டி, எழுமலை, சூலப்புரம் உள்ளிட்ட கிராம மக்கள் நல்ல மழை பெய்து, நாடு செழிக்க வேண்டும் என்று மலை உச்சிக்கு சென்று அங்குள்ள நீலமேகப்பெருமாளுக்கு சைவ உணவு சமைத்து படையல் செய்து வணங்கினர். தொடர்ந்து அனைவருக்கும் பாறையில் இலை போடாமல் சோறு பரிமாறப்பட்டது. அதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டனர். அதன் பின்னர் சாமியை வணங்கிவிட்டு அனைவரும் மலை உச்சியிலிருந்து கீழே இறங்கி வந்தனர்.

 இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், சாப்பிட்ட இடம் கழுவப்படாமல் இருப்பதால் நீலமேகப்பெருமாள் மழையை வரவழைத்து அந்த இடத்தை கழுவி சுத்தம் செய்வார் என பழமையான நம்பிக்கையில் இந்த நேர்த்திக்கடன் நடந்து வருகிறது. மேலும் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து, உணவுப்பஞ்சம் ஏற்படாமல் பசி, பட்டினி தீரும் என்றும் நம்புகின்றனர்.

Next Story