வெவ்வேறு திருமண மண்டபங்களில் 2 பெண்களின் 8 பவுன் சங்கிலிகள் திருட்டு

வெவ்வேறு திருமண மண்டபங்களில் 2 பெண்களின் 8 பவுன் சங்கிலிகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் சமயபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மனைவி நீலாவதி (வயது 59). இவர் சம்பவத்தன்று திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். அங்கு நீலாவதி 5 பவுன் சங்கிலியை ஒரு கைப்பையில் போட்டு ஒரு அறையில் வைத்து விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது கைப்பை மட்டுமே இருந்தது. அதில் இருந்த 5 பவுன் சங்கிலியை காணவில்லை. மர்மநபர்கள் சங்கிலியை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக நீலாவதி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதேபோல் திருச்சி விமானநிலையம் ஜே.கே.நகர் செம்பருத்தி தெருவை சேர்ந்த முகமது தமீம் நிஹார். இவருடைய மனைவி இன்திசார்(28). இவர் சம்பவத்தன்று திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தான் வைத்திருந்த பையை ஒரு அறையில் வைத்து விட்டு, கழிவறைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது பையில் இருந்த 3 பவுன் சங்கிலியை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக இன்திசார் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேற்கண்ட புகார்களின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து நகை திருட்டு போன திருமண மண்டபங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் சம்பவத்தன்று பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story