கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்


கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:30 AM IST (Updated: 8 Oct 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி,

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று காலை திருச்சி பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் சுந்தரராஜூ முன்னிலை வகித்தார். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் பிரதிமாதம் 7-ந்தேதி வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவை தொகையினை வழங்க வேண்டும். போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தை மாலை 5.30 மணியளவில் போராட்டக்காரர்கள் முடித்து கொண்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 16-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story