பூந்தமல்லியில் பிளஸ்–2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


பூந்தமல்லியில் பிளஸ்–2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2017 4:15 AM IST (Updated: 8 Oct 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி கீழ்மா நகர், கருணாகரன் தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மகன் பர்வேஷ்குமார்(வயது 17). இவர், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

பூந்தமல்லி,

கடந்த 2 நாட்களாக பர்வேஷ்குமார், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மாலை தனது அறைக்குள் சென்ற அவர், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், அறைக்கு சென்று பார்த்த போது, தங்கள் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தூக்கில் தொங்கிய பர்வேஷ்குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பர்வேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், தற்கொலை செய்த பர்வேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மாணவர் பர்வேஷ்குமார் வீட்டு பாடங்களை சரியாக செய்யாததால் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று பள்ளியில் அனைத்து மாணவர்களின் பெற்றோரை அழைத்து ஆசிரியர்கள் கூட்டம் நடத்தியதாக தெரிகிறது.

இதனால் பயந்து போன பர்வேஷ்குமார், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.


Next Story