சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்று அசத்திய நாய்கள்
சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற நாய்கள் உரிமையாளரின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டு அசத்தியது. இது பார்வையாளர்களை பரவசமடைய செய்தது.
சென்னை,
‘தி மெட்ராஸ் கெனைன் கிளப்’ சார்பில் நாய்கள் கண்காட்சி சென்னை மதுரவாயல் சிவா பார்வதி புஷ்பா கார்டனில் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நாய்கள் கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 52 இனங்களை சேர்ந்த 400 நாய்கள் கலந்து கொண்டன. முதல் நாளான நேற்று நாய்களுக்கான உடல் தகுதி, முக பாவனைகள், எடை ஆகியவை சோதனை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, உரிமையாளரின் கட்டளைக்கு ஏற்ப நாய் எப்படி செயல்படுகிறது. உரிமையாளரின் கட்டளையை நாய் எந்தவிதத்தில் புரிந்து கொள்கிறது என்பது போன்ற சோதனைகள் நடைபெற்றது. இந்த சோதனையின் போது பல்வேறு விதமான நாய்கள் தங்களின் உரிமையாளர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்பாடுகளை செய்து அசத்தின. நாய்களின் செயல்பாடுகளை பார்வையாளர்கள் பரவசத்துடன் கண்டுகளித்தனர்.
நாய்களுக்கான இந்த சோதனையை அளவிட நடுவராக பிரேசில், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 6 வெளிநாட்டினர் வந்திருந்தனர். இந்த நாய் கண்காட்சியில் தமிழ்நாடு போலீஸ் துறைக்கு சொந்தமான மோப்ப நாய்களும், ரெயில்வே பாதுகாப்பு படைக்கு செந்தமான மோப்ப நாய்களும் கலந்து கொண்டன.
கண்காட்சி குறித்து ‘தி மெட்ராஸ் கெனைன் கிளப்பின்’ உறுப்பினர் சிதார்த் என்பவர் கூறியதாவது:-
இந்த நாய்கள் கண்காட்சி பொதுமக்களுக்கு நாய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உயர் ரக நாய்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், நாய்கள் வளர்ப்போருக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது.
இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் 400 நாய்களில், சிறந்த 11 நாய்களை அவற்றின் திறமைகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசுகள் நாய் உரிமையாளர்களிடம் வழங்கப்படும்.
நாளை(இன்று) நடைபெற இருக்கும் நாய்கள் கண்காட்சி பரிசளிப்பு விழாவில் ஐ.பி.எஸ். அதிகாரி காந்திராஜன் கலந்து கொள்ள இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story